அறிஞர்களுக்கு விருதுகள்
சிவநேயப் பேரவையின் நான்காம் ஆண்டுவிழா சென்னை மடிப்பாக்கத்தில் 25-9-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருப்புகழ் மகாமந்திர பூஜை, மாணவர்களுக்கு வெற்றி பரிசு அளித்தல், சிறப்பு சொற்பொழிவு, நாட்டிய நிகழ்வு
ஆகிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக ஜகத்குரு பரமஹம்ஸ ஸ்ரீ பரத்வாஜ ஸ்வாமிகள் (ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடம் அம்பத்தூர்) அவர்கள் 21 அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி அருளாசி அளித்தார்.
அவ்வகையில் திரு.எஸ்.வி.வரதராஜன் அவர்களுக்கு பொன்னாடை, பதக்கம் அணிவித்து “இறையருள் மாமணி” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவை சிவநேயப்பேரவை நிறுவனத்தலைவர் திரு. ஈச நேசன் மகஸ்ரீ மற்றும் அமைப்பின் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர்.
1 comment:
Nice pictures.Thanks for this useful post.online book Ticket through Redbus
Post a Comment